அ.மயூரனுடன் ஒரு நேர் காணல்.

நூல்களுக்கான விமர்சனங்களே படைப்பாளியை செழுமைப் படுத்துகின்றன. எழுத்தாளரும், ஊடகவியலாளருமான அ.மயூரனுடன் ஒரு நேர் காணல்.

தினக்குரல் பேப்பருக்கு 1.08.10 அன்று நான் வழங்கிய நேர்காணல். - நேர்கண்டவர். கவிதா ரஜீவன். தினக்குரல் ஆசிரியர் பீடம்.

1. உங்கள் படைப்புலகப் பிரவேசம் எப்பொழுது ஆரம்பமானது உங்கள் முதற்படைப்பு பற்றிக் குறிப்பிட முடியுமா?

எனது படைப்புலகப் பிரவேசம் புலம்பெயர் நாட்டில் கடுகதி வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் மனித வாழ்வியற் சூழலில் எனக்குக் கிடைத்த சிறிய ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி எனக்குத் தெரிந்த அறிவியற் கருத்துக்களை ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் புலம்பெயர் மக்களுக்கு சொல்லவேண்டும். என்ற உணர்வினால் உந்தப்பெற்று லண்டனிலிருந்து மாதமிருமுறை வெளிவரும் “ஒருபேப்பர்” என்கின்ற இதழில் “பறக்கும் தட்டுக்கள்” என்ற தலைப்பில் வானில் தென்படும் மர்மப்பொருள் பற்றிய விரிவான அறிவியல்த் தொடர் ஒன்றை எழுதியிருந்தேன். இதுதான் எனது முதலாவது கன்னிப்படைப்பு.

2. இயந்திரமயமாக வாழ வேண்டிய ஒருநாட்டில் இருந்துகொண்டு எப்படி உங்களால் இலக்கிய முயற்சிகளிலும் ஈடுபட முடிகிறது?

உண்மையில் மேற்குலக நாடுகளில் வாழ்பவர்கள். இலக்கிய முயற்சிகளில் ஈடுபடுவது மிக்க் கடினமானதொன்று. அதிலும் இலக்கியங்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபடுவது முடியாத காரியம். ஏனெனில் இலக்கிய ஆய்வுகளுக்கு வேண்டிய நூல்களைப் பெறுவது மிகவும் கடினம். அத்தோடு இலக்கியக் கருத்தாடல்களில் ஈடுபடுவதற்கான இலக்கிய வாதிகளை அல்லது இலக்கிய அறிவுடையவர்களை சந்திப்பதென்பதும் கடினமானது. ஆனால் மேற்குலக் நாடுகளில் குறிப்பாக லண்டனில் மாத்திரம் ஈழத்தமிழர்கள் சிதறி வாழாமல் லண்டன் நகர எல்லைக்குள்ளேயே வாழ்வதனால் இலக்கியக் கருத்தாடல்களிலும், ஆரோக்கியமான இலக்கிய விவாதங்களில் ஈடுபடக் கூடியதுமான இலக்கிய அறிவுடைய நண்பர்களும், நூல்களைப் பெறக்கூடிய தனிப்பட்ட நூலகங்களை வைத்திருக்கும் சிலரும் எனக்கு அறிமுகமாகி இருந்த்தனால் இம்முயற்சியில் ஈடுபடுவதற்கானதொரு காலச்சூழ்நிலையை ஏற்படுத்திற்று.

3. இராமாயணத்தின் வரலாற்று நம்பகத்தன்மை என்ற விமர்சன ரீதியான உங்கள் நூலுக்கு கடும் விமர்சனங்கள் வந்திருக்கும் அவற்றை நீங்கள் எதிர்பார்த்தீர்களா? விமர்சனங்களை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறீர்கள்?

(என்னுடைய புத்தகம்)




இராமாயணத்தின் வரலாற்று நம்பகத்தன்மை என்ற தலைப்பிலிருந்தே எனக்கு வில்லங்கமான பல விமர்சனங்கள் வந்து குவியும் என எதிர்பார்த்தேன். அதுவே நிகழ்ந்த்து. ஏன் இந்நூல் வெளியீட்டு விழாவிற்கான மண்டபத்தை லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய நிர்வாகம் எனக்குத் தந்துதவியபோதும் ஆலய நிர்வாகத்திற்கு கடும் விமர்சனங்கள் குவிந்த்திலிருந்து எண்ணிப்பாருங்கள். இந்நூலுக்கு எவ்வாறான விமர்சனங்கள் கிளம்பியிருக்கும் எண்டு. ஒரு நூலுக்கு எவ்வளவு விமர்சனங்கள் வருகின்றதோ அந்தளவிற்கு அந்தப் படைப்பாளி செழிமைப்படுத்தப்படுகின்றான், புடம்போடப்படுகின்றான். ஆரோக்கியமான விமர்சனங்களும், வியாக்கியானங்களும் எனது படைப்பின் நேர்த்தியை மேலும் வழிப்படுத்தும் என நான் நம்புகிறேன்.
விமர்சனங்கள் அதிகரிக்கின்ற போதுதான் அது பற்றி ஆராய பலரையும் தூண்டும். நான் இட்ட ஒரு பொறி பல்லாயிரமாகச் சிதறி ஒளிப்பிளம்பாக தமிழ் இலக்கிய உலகம் உண்மையைத் தேடி ஆராய்ந்து வரலாற்றுத் திரிபுகளையும், மத்த்தின் பெயரால் மூடிமறைக்கப்பட்டிருக்கும் பொய்மைகளையும் வெளி உலகிற்குக் கொண்டுவரும். பல ஆயிரம் ஆண்டுகால நம்பிக்கையை எனது ஒரு சிறிய படைப்பு உடைத்துவிடும் என எதிர்பார்க்க முடியாதுதான். நீண்டகால வரலாற்று ஓட்டத்தில் எனது கருத்துக்கள் ஆலம்விருட்சமாக வளர்வது தவிர்க்கமுடியாத்தொன்றே.

4. கம்பருக்கு கழகங்கள் அமைத்து கம்பன் புகழ் வளர்த்து கம்பராமாயணத்தை கௌரவப்படுத்தி வரும் நிலையிலும், படித்தவர்கள் முதல் பாமர்ர்வரை அதனை நம்பி இராமர், ஆஞ்சநேயர் போன்ற இராமாயணக் கதாபாத்திரங்களை வழிபட்டு வரும் நிலையிலும், இராமாயணம் உண்மையான வரலாறு அல்ல புனைகதையே என்றும் அது சமூகத் தேவையைப் பிரச்சாரப்படுத்துகின்ற ஒரு பிரச்சார ஊடகம் என்பதையும் நீங்கள் உங்கள் நூலில் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினாலும் அதனை மக்கள் எவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்வார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்? இந்நூல் மக்களிடத்திலே மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறீர்களா?

மாற்றங்கள் என்றும் மாறாத மனித த்த்துவங்கள். மாற்றங்கள் இல்லையேல் மனிதவாழ்வு அற்றமற்றதாகிவிடும். புவி கோளவடிவானதென்பதை அண்மையில் தான் கிறிஸ்தவ தலைமைப்பீடமான வத்திக்கான் ஏற்றுக்கொண்டது. உண்மையைக் கூறியவருக்கும் மரண தண்டணை அல்லவா இந்த உலகம் வழங்கியது. நாங்கள் இராமாயணக்கதை என்றுதானே சொல்கின்றோம். கதை என்றால் கற்பனை ரீதியாக்க் கூறுவது தானே. கம்பரே அவையடக்கம் என்ற பகுதியில் இராமகாதை என்றுதான் கூறுகின்றார். மேலும் இராமனுக்குக் கோயில்கட்டிய மக்கள் இன்று கம்பனுக்கும் கோயில்கட்டத் தொடங்கிவிட்டனர். அப்படியானால் வருங்காலத்தில் ஹரிப்பொட்டருக்கும், ஸ்பைட்டமானுக்கும் கோயில்கட்ட வேண்டிய காலமெல்லவா வரும்.
அத்தோடு குஷ்புவுக்குக் கட்டிய கோயில் என்னவாற்று. தமிழக சாமியார்களின் கூத்துக்கள் தற்போது அம்பலப்படுகின்றதல்லவா? காலங்கள் மாறும். கருத்துக்கள் மாறும். உண்மைகள் உலகறிய உரைக்கப்படும். அதுவரை என் போன்ற இலக்கிய வாதிகள் விமர்சிக்கப்டுவார்கள். ஆனால் நாங்கள் ஓயமாட்டோம்.

5. இராமாயணத்தில் பல இடைச் செருகல்கள் இருப்பதாக இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது. அவையாரால் எப்போது மேற்கொள்ளப்பட்டன என்று அறிய முடியுமா?

இடைச்செருகல் என்பதை மிகத்துல்லியமாக யாரால் எப்போது மேற்கொள்ளப்பட்டது. என்பதைச் சொல்லமுடியாதுதான். ஆனால் இடைச்செருகல் நிகழ்ந்திருக்கின்றதென்பதை உறுதிபடக் கூறமுடியும். அதற்கான ஆதாரங்களை நான் ஏலவே நூலில் குறிப்பிட்டுள்ளேன். இடைச்செருகல்கள் பலவேறு காலகட்டங்களில் பலரால் மேற்கொள்ளப்பட்டவை என்பதுதான் உண்மை ஏனெனில் பழைய ஏட்டுச்சுவடிகளின் ஆயுட்காலம் 300 வருடங்களே. அதன்பின் அவை செல்லரித்துச் சிதைவடைந்துவிடும். ஆகவே 300 வருடங்களுக்கொருமுறை படியெடுக்க வேண்டும். அப்படியிருக்கும் போது. ஒருசில ஆயிரம் ஆண்டுகள் முன் நடந்த்தாக கூறப்படும் கதையை எத்தனை தரம் படியெடுத்திருப்பார்கள். எத்தனை பேர் படியெடுத்திருப்பார்கள் என்று உறுதியாக்க கூறமுடியாது. படியெடுத்தவர்கள் தமது விருப்பத்திற்கேற்றாற்போல் மாற்றியிருக்கலாம் அல்லவா.

6. இந்நூலிற்கான ஆதாரங்களை எல்லாம் நீங்கள் எங்கிருந்து பெற்றுக்கொண்டீர்கள்?

இந்த நூலிற்கான ஆதாரங்களை பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் அவ்வப்போது வெளிவந்த ஆய்வுக்கட்டுரைகளிலிருந்தும், பல தமிழகத்து பல்கலைக்கழக ஆய்வு நூல்களிலிருந்தும், வரலாற்றாய்வாளர் கலாநிதி எஸ். தியாகராஜா போன்ற வரலாற்று ஆசிரியர்களிலிருந்தும், இராமாயணம் பற்றிய பல்வகைப்பட்ட விமர்சன நூல்களிலிருந்தும் மற்றும் புவியியல் ஆய்வு நூல்களிலிருந்தும், பெற்றுக்கொண்டேன்.

7. உங்கள் படைப்புலகப் பயணத்திற்கு ஊடகங்கள் எந்தளவிற்கு பக்கபலமாக உள்ளன என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

ஒரு படைப்பாளிக்கு ஊடகங்களின் துணையில்லையேல். படைப்புக்களை மேற்கொள்வது சிரம்மானதும், படைப்பியல் ஆர்வத்தை மழுங்கடிக்கவும் செய்துவிடும். எனவே ஒரு படைப்பாளிக்கு ஊடகங்களின் துணை இன்றியமையாத்து என்றே கருதுகின்றேன். படைப்புக்கள் ஊடகங்களில் வெளிவரும் போதுதான் தனது கருத்துக்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டுவிட்டது. என்ற மன நிறைவோடு ஓர் படைப்பாளி தனது இலக்கினை அடைந்த சந்தோசத்தையும், மனத்திருப்தியையும் பெறுகின்றான்.
அந்த வகையில் எனது படைப்புக்களுக்கு புலம் பெயர் தேசத்தில் உள்ள ஊடகங்களும், தாயகத்தில் உள்ள ஊடகங்களும் பெரும் துணையாகவே உள்ளது என்றே கருதுகின்றேன். பொதுவாக புலம்பெயர் தேசத்தில் இருந்து வெளிவரும் ஒரு பேப்பர் என்கின்ற பத்திரிகையின் துணை ஆசிரியராக நான் ஆரம்ப காலத்தில் இருந்தமையால் நான் சொல்ல வந்த கருத்துக்களை மக்கள் மத்தியில் சென்றடைவதற்கு அந்த ஊடகம் எனக்குத் துணை நின்றது. அதேபோல் ஈழமுரசு பத்திரிகையும் எனது படைப்புக்களை பிரசுரித்து எனது படைப்புக்கு பக்கபலமாகின. தாயகத்திலும் வீரகேசரி, தினக்குரல் போன்ற முன்னணிப் பத்திரிகைகளும் எனது படைப்புக்களுக்கு பெரிதும் துணைபுரிந்தன.

8. எழுத்துலகில் உங்கள் இலக்கு என்று நீங்கள் எதையாவது வைத்துப் பயணித்துக்கொண்டிருக்கிறீர்களா?

சுயத்தை இழக்காமல் அறிவியல் பூர்வமாக சிந்தித்துச் செயலாற்றுகின்ற தமிழ்த்தேசிய சமூகத்தை கட்டி வளர்ப்பதுவே எனது இலக்கு.

9. புலம்பெயர் நாட்டில் வாழும் ஒரு இளம் எழுத்தாளர் என்ற வகையில் அங்கு உங்கள் இலக்கிய முன்னெடுப்புக்களுக்குப் போதியளவு ஆதரவு கிடைக்கின்றதா?

புலம்பெயர் தேசத்தில் வாழ்கின்ற மக்கள் யாவரும் கடுகதி வேகத்தில் இயந்திர மயமான ஒரு வாழ்வியல் ஓட்டத்தில் பயணித்துக் கொண்டிருப்பதனால் இலக்கிய முன்னெடுப்புக்களுக்கான பெரியளவு ஆதரவு ஒப்பீட்டு அளவில் உண்மையில் கிடைப்பதில்லைத்தான். ஆனாலும் உணர்ச்சி மிக்கதும், இலக்கியத் தேடல் அவாவுடைய சில இலக்கியவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களுடைய உறுதியான ஆதரவுதான் என்போன்ற படைப்பாளிகளின் படைப்புக்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிப்பதாக அமைகின்றது. இந்நிலமையானது ஒரு படிமுறை வளர்ச்சியினூடாக எதிர்காலத்தில் இலக்கியப் படைப்புக்களுக்கான போதிய ஆதரவை நல்க்க்கூடிய புலம்பெயர் சமூக்க் கட்டமைப்பை உருவாக்கும் என நான் நம்புகின்றேன்.

10. இந் நூலைத் தொடர்ந்து தற்போதும் வேறு ஏதாவது, படைப்பு முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றீர்களா?

ஆம். தற்போது அறிவியல் ரீதியான தகவல்களை வழங்க்க் கூடியதான ஒரு படைப்பொன்றின் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றேன். பறக்கும் தட்டுக்கள். என்ற விண்வெளி அதிசயங்கள் பற்றிய படைப்பு மிகவிரைவில் வெளிவரும்.
புலம்பெயர் தேசத்திலும் தாயகத்திலும் வெளிவரும் ஊடகங்களில் தொடர்ச்சியாக ஆய்வுக்கட்டுரைகளை எழுதிக்கொண்டிருக்கின்றேன்.


நன்றி
நேர்கண்டவர் :- கவிதா ரஜீவன்
தினக்குரல்
1.08.10
Read more...

தமிழரை அரக்கர்களாக்கி எம்மை அழித்த நிகழ்வை நாம் தீபாவளியாகக் கொண்டாடத்தான் வேண்டுமா? தொல்லியல் ரீதியான நோக்கு. அ.மயூரன்.

    


  இப்பிரபஞ்சத்தில் நீரில் தோன்றிய உயிரினம் பரிணாம வளர்ச்சிப் படிகளைத் தாண்டி மண்ணில் மனிதனாகத் தடம் பதித்த காலம் முதல் இன்றைய கண்ணி யுகத்திற்கு இடைப்பட்ட மனித நாகரிக வளர்ச்சிப் படிமுறையின் நீண்ட வரலாற்றுப் பக்கங்களில் நம் மூதாதையர்களை அரக்கர்கள், குரங்குகள் எனக் கொன்று குவித்த நிகழ்வுகள் தொடர்கதையாகிவிட்டன.

                 அந்தவகையில் தான் ஆதியில் தோன்றிய மனிதன் நாகரிக வளர்ச்சியடைந்து வருகின்ற போது அவனது தேவைகள் அதிகமாகத் தொடங்கின அவ்வாறு அதிகமாகின்ற வேளையில் அந்தத் தேவைகளை அவன் வாழும் சூழலில் பூர்த்தி செய்யமுடியாமல் போகவும், காலநிலை இடம் கொடுக்காது போகவும், அவன் தான் இருந்த இடத்தை விட்டு வேறு பிரதேசத்திற்கு அல்லது கண்டங்களுக்கு தொடர்ச்சியாக இடம்பெயரத் தொடங்கினான்.

                     தென்னிந்தியத் தீபகர்ப்பத்திற்கு புதிய மனிதன் முதலில் ஆபிரிக்காக் கண்டத்திலிந்தே வந்து சேர்ந்தான். இவன் ஆபிரிக்காவை விட்டுப் புறப்பட்ட காலம் இற்றைக்கு 85,000 ஆண்டுகள் முன்பு எனக் கணிக்கப்படுகிறது. இம் மனிதர்களின் இன்றைய வம்சாவழியினர் தென்னிந்தியாவின் நீலகிரி மலைச்சாரலிலும், கிழக்கிந்தியப் பகுதிகளிலும் வாழும் மலைச்சாதி மக்களாவார்கள். இலங்கையில் வாழும் வேடர்களும் இவர்களின் வம்சா வழியினரே. இவர்களைக் குறிக்கும் மரபணுக் குறியீடு M2 ஆகும்.

                  இதற்குப் பின்னர் இரு பெரிய மனிதப் புலப்பெயர்வுகள் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இன்றைய ஈரான் வழியாக இந்தியாவுக்கு நிகழ்ந்திருக்கின்றது. இது இற்றைக்கு 30,000 ஆண்டுகள் முன்பும், 10.000 ஆண்டுகள் முன்பும் நிகழ்ந்திருக்கின்றது என்பது தொல்மரபியல் மூலம் இன்று நிரூபணமாகின்றது.

           இவர்களே இன்றைய திராவிட இனத்தவர்களாவார்கள். இவர்களைக் அடையாளப்படுத்தும் மரபுக் குறியீடு M20 ஆகும்.(Spencer Walls : The Journey of Man (new York) 2002)  இதன் பின்னர் இ.மு 4000 – 3500 ஆண்டுக் காலத்தில் இந்தோ – ஆரியர்கள் இந்தியாவை வந்தடைந்தனர். இவர்களைக் குறிக்கும் மரபணுக் குறியீடு M 17 ஆகும்.  

                     ஆகவே இவ்வாறு காலத்துக்குக் காலம் மனிதன் கண்டங்கள் தாண்டிப் புலம் பெயர்ந்தான். அந்த வகையில் தான் எம் ஆதிக்குடிகள் என்று சொல்லக் கூடிய ஒஸ்திரலோயிட் மக்கள் (இவர்கள் பேசிய மொழி முண்டா என அழைக்கப்படுகின்றது. இலங்கை என்பதற்கு முண்டா மொழியில் தான் தீவு என் அர்த்தப்படுகின்றது) ஆபிரிக்காக் கண்டத்திலிருந்து இந்தியா நோக்கி இற்றைக்கு 85,000 ஆண்டுகளுக்கு முன் வருகின்றான்.

               இவ்வாறு வந்தவன் இலங்கை வழியாக ஒஸ்திரேலியா நோக்கிச் செல்லுகின்றான். இவ்வாறு சென்றவர்களில் சில கூட்டம் கிட்டத்தட்ட 60,000 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் இலங்கை வழியே வந்து இந்தியாவில் குடி பெயருகின்றனர். இந்த இனத்தின் எச்சங்கள் இன்றும் தமிழகம் நீலகிரி மலையிலும் கிழக்கிந்தியப் பகுதிகளிலும் இலங்கையிலும் வாழும் வேடர்களாவார்கள். இதற்கு தொல்லியல் ஆதாரங்கள் பல இருக்கின்றன.

  அவ்வாறு வந்து வாழ்ந்த மனித இனம் (ஒஸ்திரலோயிட்) தாய்வழிச் சமூகத்தைச் சார்ந்தவர்களாகவே இருந்தார்கள். இந்த நேரத்தில் தான் கிட்டத்தட்ட இற்றைக்கு 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் ஹைபர், போலன் கணவாய்களினூடாக இந்தியாவின் விந்திய மலைவரை வந்த ஆரியர். அதற்குத் தெற்கே வாழ்ந்த மக்களை அரக்கர்கள், அசுரர்கள், குரங்குகள் என்று அழைத்தனர்.

       இதற்குக் காரணம் அவர்களில் அதிகமானவர்கள் வேடுவர்களாகவும், கூட்டுக் குடும்பங்களாகவும் இருந்த்தாகும். அத்துடன் ஆரியர்களது கலாச்சாரமும், குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மக்களின் கலாச்சாரமும் வித்தியாசமாக இருந்தமையாலேயே அவர்களை அசுரர்கள், குரங்குகள் என்றனர் இதுவே உண்மை. இச்சொல் பின்னர் அவர்களை அரக்கர்கள் என அழைக்கக் காரணமாக அமைந்துவிட்டது.


            இவ்வாறு எம் மூதாதையர்களான இவர்களை அரக்கர்கள் எனச்சொல்லி அழித்தனர். அதன்பின்னர் தர்மத்தின் யுத்தம் எனச் சொல்லி கதைபுனைந்தனர். இராமாயணம், மகாபாரதர், போன்ற கதைகள் எல்லாம் இவ்வாறு புனையப்பட்டதே ஆகும். அதே போல்த் தான் தீபாவளித்தினத்தைத் கொண்டாடுவதற்கு காரணமாகச் சொல்லப்பட்ட அரக்கன் நரகாசூரன் அழிப்பு, சூரன் அழிப்பு முதலானவை இவைகள் வெறும் பிராமணியம் கட்டிவிட்ட கதைகளே.

    ஏன் தமிழை, தமிழ் மண்ணை ஆழமாக நேசித்த ஒரு இனத்தை உயிராக சுவாசித்த மக்களை பயங்கரவாதிகள் என்ற பெயரில் கடந்தவருடம் முள்ளிவாய்க்காலில் அழித்தமை உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நினைக்கின்றேன்.

 இதுபோல்த் தான் 18 ஆம் நூற்றாண்டுகளில் நியுஸ்லாந்தைக் கண்டுபிடித்த பிரித்தானியர் அங்கிருந்த ஒஸ்திரலோயிட் இனத்தை குரங்குகள் என அழித்த வரலாற்றை யாரும் மறக்க மாட்டார்கள். அது ஏன் அமெரிக்கா கண்டத்தைக் கண்டுபிடிக்கச் சென்று எல்சல்வடோர் என்ற தீவில் இறங்கிய கொலம்பஸ் கும்பல் அங்கிருந்த செவ்விந்தியர்களை எப்படிக் கற்பழித்துக் கொன்றனர். ஏன் அமெரிக்காவைக் கண்டுபிடித்த அமெரிக்க வெஸ்புஜி என்ன செய்தான். இதை வரலாறு மறக்காது.  அது போலதான் இந்த நரகாசுரன் நாடகமும்.

இனி அரக்கர் இனம் இருந்ததா என நோக்குவோம்.  

    அப்படி அரக்கர் இனம் இலங்கையில், அல்லது இந்தியாவில் இருந்திருக்குமானால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஈமத்தாழிகளிலும், புதைகுழிகளிலும் அவர்களது உடல்களோ அதற்கான ஆதாரங்களோ கண்டுபிடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஏன் கண்டுபிடிக்கப்படவில்லை.

    ஏதோ ஒரு யுகத்தில் வாழ்ந்துவிட்டு, இன்று உலகில் அடியோடு வழக்கொழிந்து விட்ட உயிரினங்களின் எலும்புக்கூடுகளோ அல்லது எலும்புகளது பாறைப்படிமங்களோ கிடைத்துவிட்டால் அதன் ஊனத்தை வைத்ந்து பூர்வீகத்தையே கண்டுபிடித்துவிடும் அளவுக்கு இன்றைய நவீன விஞ்ஞானத்தால் முடியும். இன்றைய யுகத்திலும் புலுடா விடுகிறார்கள்.   

    மீசோ சோயிக் யுகம் (Mesozoic Era) எனப்படும் யுகத்தில் (இந்த மீசோ சோயிக் யுகத்தில் டிரையோசிக், ஜூராசிக், கிரிட்டேசியஸ், என்னும் மூன்று காலங்கள் அடங்கும்.) அதாவது இற்றைக்கு 6.5 கோடிகளுக்கு முன் வாழ்ந்த்தாக கருதப்படும் டைனோசர்களின் எச்சங்கள் கூட கண்டுபிடிக்கப்பட்டு 1842 இல் டைனோசர் என்ற இனம் வாழ்ந்ததாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதற்கு ஆதாரமாக அமைந்தவை அவற்றின் எலும்புக்கூடுகள் அல்ல எலும்புகள் உக்கிய பாறைப் படிமங்கள் தான்.  

அப்படி 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் பூர்வீகத்தையே தெளிவாக்க் கண்டறிய முடியும் என்றால். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த்தாக ஆரியர்களால் கூறப்படும் அரக்கர் இனங்களின் எலும்புகளோ அல்லது எலும்புகள் உக்கிய பாறைப்படை எச்சங்களோ இலங்கையின் எப்பாகத்திலும் கண்டுபிடிக்கப்படாத்து ஏன்? ஆறடிக்கு மேற்பட்ட உயரம் உள்ள மனிதனது எச்சங்கள் கூட இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அரக்கர் என்ற இனமே இலங்கையில் இல்லை.

ஏன் ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ் என்ற மனித இனம் உருவானது ஆபிரிக்கா, மற்றும் குமரிக்கண்டத்தில் என்றும், அங்கேயே முதலாவது மனித நாகரீகம் உருவானதாகவும் கூறப்படுகின்றது.

ஆதிகாலத்தில் குமரிக்கண்டத்தில் இருந்து இந்தியா, இலங்கை வரை வாழ்ந்த மக்கள் கருமையான தோல் அமைப்பையும், திடகாத்திடமான உடலமைப்பையும் கொண்டிருந்தனர். இவர்கள் தான் நமது மூதாதையர்களான ஆதித் தமிழ்க்குடிகளே.
~~~ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆனால் தீபாவளியை ஏன் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள் என்பது விளங்கவில்லை. தீபாவளியைப் பற்றி பல கதைகள் உண்டு. வடநாட்டவரைப் பொறுத்தளவில் (குஜராத்திகள், மார்வாரிகள்) தீபாவளி இலக்குமிக்கு உரிய நாள். அவர்களது புத்தாண்டின் தொடக்க நாள். வணிகர்கள் புதுக் கணக்கை அந்த நாளில்தான் தொடங்குகிறார்கள். வங்காளிகள் தீபாவளியை காளி அல்லது துர்க்கைக்குரிய நாளாகக் கொண்டாடுகிறார்கள். இன்னும் சில இனத்தவருக்கு தீபாவளி நாள் இராமன் வனவாசம் முடித்து அயோத்திக்குத் திரும்பிய நாள்.

தமழர்களைப் பொறுத்தளவில் தீபாவளி நாள் நரகாசுரன் என்ற அசுரன் கொல்லப்பட்ட நாள். இது என்கின்றோம்.  இதைப் பற்றிய புராணக் கதை என்ன சொல்கிறது?

நரகாசுரன் பூமாதேவியின் பிள்ளை. காமரூப நாட்டின் மன்னன். படைப்புக் கடவுளான பிரமாவை நோக்கி கடும் தவம் செய்து பல வரங்களைப் பெறுகிறான். அதன் பின் தேவர்களை அவன் துன்புறுத்துகிறான். துன்பத்தைப் பொறுக்க முடியாத தேவர்கள் வைகுண்டத்தில் திருமாலிடம் சென்று முறையிடுகிறார்கள். திருமால் வழக்கம் போல் தேவர்களைக் காக்க திருவுள்ளம் கொள்கிறார்
.
ஆனால் நரகாசுரனை கொல்வது திருமாலுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. காரணம் நரகாசுரமன் தனது தாயின் கையால் அல்லாது வேறுயாராலும் கொல்ல முடியாதபடி ஏற்கனவே பிரமாவிடம் வரம் வாங்கி விட்டான். உடனே காத்தல் கடவுளான திருமால் பெரிய சதித் திட்டம் தீட்டுகிறார். தனது தேர்ச்சாரதியாக இரண்டாவது மனைவியான சத்தியபாமாவை (பூமாதேவியின் மறுஅவதாரம்) அமர்த்துகிறார். நரகாசுரனோடு நடக்கும் சண்டையின் நடுவில் அம்பு ஒன்று அவரைத் துளைக்கிறது. உடனே திருமால் மூர்ச்சை போட்டு விழுந்து விடுகிறார்.

உண்மையில் அப்படி அவர் மூர்ச்சைபோட்டு விழவில்லை. எல்லாம் நடிப்பு. இதனை விளங்கிக் கொள்ளாத சத்தியபாமா தனது கணவன் உண்மையிலேயே மூர்ச்சையாகி இறந்து விட்டார் என நினைத்து திருமாலின் வில்லை எடுத்து நரகாசுரன் மீது அம்பு எய்தி அவனைக் கொன்று விடுகிறார்.
உயிர் போகும் தருவாயில் நரகாசுரனிடம் உனது கடைசி ஆசை என்ன? என்று சத்தியபாமா கேட்கிறார். ”எனது மறைந்த நாளை மக்கள் எல்லோரும் கொண்டாட வேண்டும்”" என்கிறான் நரகாசுரன்.‘‘‘‘‘‘‘‘‘‘

இதுவே புராணம் கூறும் கதை



அத்துடன் எகிப்துக்குத் தெற்கே உள்ள கிரெட்டித் தீவை ஆண்ட மைனோஸ் என்ற மன்ன்ன் தனது அரண்மனைப் பாதாளச் சுரங்கத்தில் (முழெள்ளழள)  மினோடார் எனப்படும் மனித உடலும், காட்டெருமையின் தலையையும் உடைய அதிசய அரக்கனை அடைத்து வைத்திருந்த்தாகவும், அவனுக்கு பலி கொடுப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் 12 வாலிபர்களை அரசன் பாதாளச் சுரங்கத்தில் உள்ள மினோடர் அரக்கனுக்கு பலிகொடுத்த்தாகவும், ஏதென்ஸ் இளவரசன் தீசியஸ் அரக்கனின் பலியாளனாகச் சென்று, அரக்கனைக் கொன்று மைனோஸ் மன்ன்னுடைய மகளும், இளவரசியுமான ஏரியாடினா என்பவளை மணந்த்தாக கூறப்படுகிநன்ற பழங்கதையை சில வேளைகளில் நீங்கள் படித்திருப்பீர்கள்.


    இக்கதையானது உண்மையா என்றும், அரக்கன் என்பவன் இருந்தானா என்றும் ஆராய பிரபலமான புதைபொருள் ஆராய்ச்சி நிபுணர் ஆர்தர் இவான்ஸ் என்பவர். கிரெட்டித் தீவுக்கு சென்று மண்மேடு சூழ்ந்திருந்த அரண்மனையையும், பாதாளச் சுரங்கத்தினையும் கண்டு பிடித்து தோண்டிப் பார்த்தால் அச்சுரங்கத்தில் விசாலமான அறை ஒன்றிருந்த்து என்றும், அவற்றின் கதவு இரும்பினாலானது என்றும், அந்த அறையின் நான்கு சுவர்களிலும் காட்டெருமையின் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்த்து என்றும் தெரிவித்தார். இதுபோல் அவனது அரண்மனைச் சுவர்களிலும் அவ் ஓவியங்களைக் கண்டதாகவும் கூறியிருந்தார். இது அவன் தனது இஷ்ட தேவதையை வணங்கி அத்தெய்வத்திற்கு பலியாக ஆண்டுக்கொரு முறை இளைஞர்களை பாதாளச் சுரங்கத்தில் பலி கொடுத்தான் என்ற முடிவுக்கு வந்த்தாகவும் தெரிவித்த்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.


மேலும் பிரபல கிரேக்க கவிஞர் ஹோமர் எழுதிய கதையிலும் அரக்கன் என்பவன் வெறும் கற்பனையே என கூறியுள்ளார்   ஆகவே பார்ப்பணியம் (ஆரியம்) ஹைபர், போலன் கணவாய்களினூடாக இந்தியா வந்த ஆரியர்கள் எம்மூதாதையர்களைக் கொன்றுவிட்டு அதற்கு மத்த்தின் பெயரால் தீபத் திருவிழா வேறு. இவை எல்லாம் தேவைதானா எமக்கு? தன் மண்ணை, தமிழை உயிராக நேசித்த இனத்திற்குந முள்ளிவாய்க்காலில் கொள்ளி வைக்கப்பட்டிருக்கிறது கடந்த வருடம். இந்த நிலையில் என் மூதாதையரை, என் இனத்தை அழித்த ஒரு நிகழ்வை தமிழா நீ கொண்டாடத்தான் வேண்டுமா சற்றுச் சிந்தித்துப்பார்.

வால்மீகி, கம்பன், மட்டுமல்ல நாகரீகம் அடைந்துவிட்ட இந்திய மக்களும், ஏன் ஆரியப்புகழ்பாடி அவர்களின் கால்களை வருடிவிடும் எம் ஈழத்தமிழர்களும் பயன்படுத்தி தம் இனத்தையே இழிவு படுத்துவது வேதனை தருகின்றது. இவர்களின் பின்னால் ஜால்ரா கூட்டங்கள் வேறு!. கேட்டால் தாங்கள் படித்த மேதைகள் என்கின்றனர். தாம் படித்த வரலாறு ரிதியான ஆய்வுகளை மறந்து விட்டு மாயையில் அலைகின்றனர். எப்போது தான் இவர்கள் இம்மாயையிலிருந்து வெளியில் வந்து யாதார்த்த்த்தை சிந்திக்கப் போகின்றனர் எனத்தெரியவில்லை.
Read more...

பொப்பி மலரும் காந்தள் மலரும் ஒரு நோக்கு....,:- அ.மயூரன்.



                          இன்று உலகிலே விடுதலை வேண்டிப் போராடிய, போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் நாடுகள் எனப்பல உள்ளன. இந்நாடுகள் இன்றும் தமது விடுதலைக்காகப் போராடி வீழ்ந்த வீர்ர்களை நெஞ்சினில் வருடாவருடம் நிறுத்தி வருகிறது.   அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11 ஆம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ்ந்த வீர்ர்களை நினைவு கூரிவருகின்றமை தெரிந்ததே.






    முதலாம் உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் ஜேர்மனி கைப்பற்றிய பிரதேசங்களை எல்லாம் நேச நாடுகள் மீளக் கைப்பற்றிய வேளையில் ஜேர்மனியின் அரசர் இரண்டாம் ஹைகர் வில்லியம் 1918 இல் முடிதுறந்து போக ஆட்சியை. அரசு பொறுப்பேற்றது. அரசு பொறுப்பேற்ற மறுகணமே நிலைமை தலைகீழானது. ஜேர்மனியின் படைகள் திக்குத் திசைமாறி நின்ற வேளையில் ஜேர்மனியின் மூன்று பிரதிநிதிகள் நேசநாடுகளின் தளபதியும் பிரான்சின் ஜெனரலுமான Foch என்பவருடன் செய்துகொள்ளப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கை 1918 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 திகதி அதிகாலை ஐந்து மணிக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு பகல் 11 மணி 11 நிமிடத்திற்கு அமுலுக்கு வந்தது.




   சுமார் நான்கு ஆண்டுகள் நடந்த இடைவிடாத யுத்தமானது இதனால் முடிவுக்கு வந்தது. முதலாம் உலகப் போர் முடிவடைந்த நவம்பர் மாதம் 11 திகதி பகல் 11 மணி 11 நிமிடத்தில் உலகப் போரிலும் அதன் பின்னரும் ஏற்பட்ட சண்டைகளில் மாண்ட படைவீர்ர்களை இந்நாளில் பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள். இன்றுவரை நினைவு கூருகின்றனர்.


      அந்தவகையில் நவம்பர் 11 திகதி அமுலுக்கு வந்த இந்த சமாதான உடன்படிக்கை ஆரம்பத்தில் யுத்தநிறுத்த தினம் Armistice day  எனவே அழைக்கப்பட்டது. எனவே இதை மக்கள் முழுமையான சமாதானம் வந்துவிட்டது என்றே கருதியிருந்தனர். மாறாக ஜேர்மன் படைகள் ஹிட்லரின் தலைமையில் மீள ஒருங்கிணைக்கப்பட்டு 2 வது உலகயுத்தம் தொடங்கப்பட்டமையால் இந்த யுத்தநிறுத்த தினம் கைவிடப்பட்டது. இருந்தும் 2வது உலக மகாயுத்தம் முடிவடைந்த்தன் பின்னர் பிரித்தானிய அரசினால் இந்த யுத்தநிறுத்த தினமானது நினைவு தினமாக (Remembrance Day) ) மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டபோது அவுஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் இதை ஏற்றுக் கொண்டன. அன்றிலிருந்து இத்தினம் பொப்பி தினமாக நினைவுகூரப்படுகின்றது.




       மேலும் அவுஸ்திரேலியாவிலும் இந்நிகழ்வு மிகச்சிறப்பாக்க் கொண்டாடப்படுகிறது. அதில் சிறப்பம்சம் என்னவெனில் முதலாம் உலகப்போரில் கொல்லப்பட்டவர்களில் 35,527 வீர்ர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த 35,527 அவுஸ்திரேலிய வீர்ர்களும் அவுஸ்திரேலிய விடிவுக்காகவோ அல்லது அவுஸ்திரேலிய மண்ணிலோ மடியவில்லை. இவர்களது கல்லறைகளும் அவுஸ்திரேலியாவில் இல்லை. இறுதியாக 1993 இல் பிரான்சில் வெஸ்ரேன் புரொன்ரில் (Western Front)  புதைக்கப்பட்ட பெயர் தெரியாத ஒரு அவுஸ்திரேலிய வீரனின் உடல் அகழ்தெடுக்கப்பட்டு அவுஸ்திரேலியாவில் நவம்பர் 11 இல் அரசமரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்நடது. இவனது உடலே 35,527 வீர்ர்களின் நினைவுகளுக்கும் சாட்சி.இதேபோல 2007 ஆண்டு 1வது உலகப் போரில் கொல்லப்பட்ட ஜக்ஹண்டர் என்ற அவுஸ்திரேலிய வீரனின் உக்கிய எலும்புகள் மரபணுச் சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டு பெல்ஜியம் போர் மயாணத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதேபோல் பிரித்தானியாவும் 2007 இல் இறந்த வீரனை அடக்கம் செய்த்து நினைவிருக்கலாம்.  




     தமிழீழ மக்கள் எவ்வாறு கார்த்திகை 27ஐ மாவீர்ர் தினமாக்க் கொண்டாடுகின்றனரோ அதேபோல் பிரித்தானிய மக்களுக்கும் கார்த்திகை 11 முக்கியத்துவம் பெறுகின்றது. பொப்பி எனப்படும் சிவப்பு நிற மலர் இந்நாளின் நினைவு மலராக்க் கொள்ளப்படுகின்றது.






பெல்ஜியம் நாட்டில் உள்ள Flanders Fields  நகரத்திலும், பிரான்சிலும் இவ்வகைப் பொப்பிப் பூக்கள் அதிகம் காணப்படுகின்றன. அத்துடன் பிரித்தானியாவைச் சேர்ந்த போர்வீரன் லெப்டினட் கேணல் Jone McCrae   என்பவர் 1915 எழுதிய பெல்ஜியத்தில் Flanders Fields  போர்க்களத்தில் பொப்பிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன என்றும் சிலுவை அடையாளங்களுக்கிடையில் வரிசைவரிசையாகப் பூத்துக் குலுங்கும் பொப்பிப் பூக்கள் எங்களுடைய இருப்பை அடையாளங் காட்டுகின்றன. என்ற கவிதைவரிகளின் காரணமாகவே பொப்பிப் பூக்களை இந்நாடுகள் தங்களின் கல்லறை மலர்களாகத் தெரிந்தெடுத்திருந்தனர்.




ஜோன் மக்ரீ எழுதிய வரிகள் இவைதான்




“Flanders Fields  போர்க்களத்தில் பொப்பி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. சிலுவை அடையாளங்களுக்கிடையே வரிசை வரிசையாக பொப்பி மலர்கள் எங்களுடைய இருப்பிடங்களை அடையாளம் காட்டுகின்றன. கீழே முழங்குகின்ற துப்பாக்கிச் சத்தங்கள் தங்கள் காதுகளில் வாங்காது வானம் பாடிகள் பறக்கின்றன. நாங்கள் இறந்தவர்கள். சில நாட்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள். வாழ்ந்தோம் வீழ்ந்தோம். சூரிய உதயத்தை உணர்ந்தோம். சூரிய அஸ்தமனத்தின் ஒளியைக் கண்டோம். காதலித்தோம், காதலிக்கவும் பட்டோம். இப்போது Flanders Fields  இல் கிடக்கின்றோம். எங்களுடைய சண்டையைப் பகைவனிடம் கொண்டு செல்லுங்கள். செயல் இழக்கப் போகின்ற எங்கள் கைகளில் உள்ள விளக்கை உங்களிடம் தருகின்றோம். இதனை உங்களுடையதாக உயர்த்திப் பிடியுங்கள். இறந்து கொண்டிருக்கும் எங்களுடைய நம்பிக்கையை நீங்கள் உடைப்பீர்களானால் நாங்கள் தூங்கப் போவதில்லை. ஆனால் இந்தப் பொப்பி மலர்கள் இல் தொடர்ந்து பூத்துக் குலுங்கும்”.  


                அற்புதமான உள்ளார்த்தம் நிறைந்த உயரிய கவிதை வரிகள் எம்மால் புரிந்துகொள்ளமுடியும். ஏனெனில் வீழ்ந்தவர்களுக்காக வருடாவருடம் விழா எடுப்பவர்களல்லவா நாங்கள். அழகிய சிவந்த இதழ்களைக் கொண்ட பொப்பிப் பூக்கள் பிரித்தானியாவில் இல்லை. மேலும் இந்தப் பொப்பி மலரானது ஆரம்ப கால் முதல் அபின் எனப்படும் கெரோயினுக்கு முக்கிய பொருளாக அமைகின்றதுடன். பொப்பியின் விதையானது கசாகசா எனப்படும் வாசனைத்திரவியங்களில் ஒன்றாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.


       அத்துடன் இப்பொப்பிப் பூக்கள் இலகுவில் உதிர்ந்துவிடக் கூடியன. ஆகவேதான் கடைகளில் கடதாசியால் செய்யப்பட்ட பொப்பி மலர்களை மக்கள் மடிந்தவரை மனதில் எண்ணி வாங்கி அணிவர். இந்த வீர்ர்கள் பிரித்தானியாவை வளமுள்ள நாடாக மாற்றியதற்கு தம்முயிர்களைத் தியாகம் செய்தவர்கள். என மக்கள் இன்றும் புகழாரம் சூட்டுவதைக் காணலாம். மாறாக கடந்த சில ஆண்டுகளாக லண்டனுக்குள் வெளிநாட்டவர்கள் அதிகம் வாழ்வதால் இந்நிகழ்வு மக்களில் செல்வாக்குச் செலுத்தாவிட்டாலும் லண்டன் தவிர்ந்த பிரித்தானியாவில் இந்நினைவு கூரல் தவறாது கடைப்பிடிக்கப்படுகிறது.




     அத்தோடு போரில் இறந்த வீர்ர்களுக்கு பிரித்தானியாவில் தனித்தனிக் கல்லறைகள் எதையும் அமைக்கவில்லை மாறாக பொதுவான கல்லறையை மட்டும் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் பிரித்தானியா தனது நாட்டைவிட்டு வெளிநாடுகளில் வீழ்ந்த வீர்ர்களுக்கு மட்டும் தனித்தனி கல்லறை அமைத்திருந்த்து உதாரணமாக பிரான்ஸில் நோமண்டியிலும், பெல்ஜியத்தில் Flanders Fields பகுதியிலும், தனிக்கல்லறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றது. அதேபோல் இலங்கையில் திருகோணமலையில் ஜப்பானியர்களால் கொல்லப்பட்ட பிரித்தானிய 228 வீர்ர்களுக்குத் தனித்தனி கல்லறை அமைத்துள்ளதையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.






         இந்தக்கல்லறைகளை இன்றும் திருகோணமலைக்கு வெளியே திருகோணமலையிலிருந்து நிலாவெளி செல்லும் வீதியில் கிட்டத்தட்ட 3மைல் தொலைவில் காணமுடிகின்றது. வேற்று நாட்டுப்படைகள் தம் நாட்டிற்குள் இறந்த்தற்காக கல்லறை அமைப்பதை அனுமதித்திருந்த இலங்கையரசு. தம்நாட்டில் அந்தநாட்டின் விடிவிற்காக வீழ்ந்த எம்புனிதர்களின் கல்லறைகளை அனுமதியாது களைந்திருக்கின்றது இது எந்தவகையில் சரியானது உறவுகளே.




          மேலும் பிரித்தானியாவில் போட்ஸ்மத் (postmouth ) என்னும் கடற்கரை நகரத்தில் உலகப்போரில் வீழ்ந்தவர்களுக்காக டீ-டே மிய+சியம் என்னும் நினைவாலயத்தையும் அமைத்து அந்த வீர்ர்களைக் கௌரவித்திருக்கின்றது பிரித்தானிய அரசு.


          இதுவரை பொப்பி மலரினதும் பொப்பி தினத்தினதும் முக்கியத்துவம் பற்றி நோக்கினோம் இனி இதே கார்திகை மாதத்தில் ஈழத்தமிழர்கள் வரலாற்று விழுமியம் கொண்ட கார்த்திகைப்பூ என நாம் அழைக்கும் காந்தள் மலரை தமது நினைவு மலராக கொண்டாடுகின்ற சிறப்பம்சத்தை சற்று நோக்குதல் பொருந்தும் எனக்கருதுகின்றேன்.


       இதன் இதழ்கள் பெண்களின் கைவிரல்களுக்கு ஒப்பிட்டுக் கூறப்படுவதால் இதனைக் காந்தள் மலர் என்பர். இக்கார்த்திகைப்பூ பண்டைத்தமிழ் வாழ்வுக்கு மிகவும் நெருக்கமான பூக்களில் ஒன்றாக இருந்துவந்துள்ளது. “காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்” என்று காந்தள் மலர் மாலை அணியும் வழக்கத்தை பதிற்றுப்பற்று அத்தாட்சிப்படுத்துகின்றது.   “மரகதமணித்தாள் செறிந்த மணிக்காந்தள் மென் விரல்கள்” என்று சிலப்பதிகாரம் உவமை செய்கின்றது.






          “காந்தள் முழுமுதல் மெல்லிலை குழைய. முயங்கலும் இல்லுய்த்து நடுதலும்” என்று தலைவனுடைய மலையில் இருந்து மழைநீரால் அடித்து வரப்பட்ட காந்தட் கிழங்கை நட்டு வளர்த்துத் தன்னை ஆற்றுப்படுத்தும் நாயகி பற்றி குறுந்தொகை கூறுகிறது.


“சேலை அடுக்கத்துச் சுரம்பு என விரிந்த காந்தளுள்ள்ளும்”  என தெய்வங்களுக்குக் காந்தள் பூ சூட்டப்பட்டதை அகநானூறு தெளிவு படுத்துகின்றது. “வெய்யறி சிறப்பன் வெளவாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறுபகை” என்று காந்தள் மலரணிந்து வெறியாடுவதைத் தொல்காப்பியம் சித்தரிக்கின்றது. அத்துடன் தமிழரின் போர்க்கடவுளான முருகனுக்குரிய பூவாக புறப்பொருள் வெண்பாமாலை சிறப்பித்துக் கூறுகின்றது.


          இப்படிக் கார்த்திகைப் பூவில் வாய் நனைக்காத புலவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு பழந்தமிழர் இலக்கியங்கள் எங்கும் கார்த்திகைப்பூ நிறைந்து கிடக்கின்றது.  தமிழர் பண்பாட்டுக்கு நெருக்கமான பூவாக இருப்பதும் தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கின் இயற்கைச் சூழலுக்குரிய ஓர் உள்நாட்டு இனமாக இருப்பதும் தேசிய பூவினதும், நினைவுப் பூவினதும் தேர்வில் கார்த்திகைப்பூ தேசியப்பூவின் தேர்வின் அடிப்படையம்சங்களை உள்ளடக்கியுள்ளது.


      சிவப்பு – மஞ்சள் வண்ணங்களைப் பிரதிபலிக்கும் பூவிதழ்களும், மாவீர்ர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பாங்கில் அந்தப்பூ விரியும் அழகும் சிறப்புத்தன்மை வாய்ந்தவையாகும். இதை அழகு செய்வதாக கவிஞர் புதுவை இரத்தின துரை அவர்களின் ’’கார்த்திகைப் பூவின் நிறத்தில் இவள் கட்டுற சேலைகள் இருக்கும் கார்த்திகை மாதம் கல்லறை நாளில் தாயவள் மேனி சிலிர்க்கும்’’ என்ற வரிகள் மேலும் சிறப்பை ஊட்டுகின்றது. இந்தக் கார்த்திகைப்பூச் செடியில் கொல்கிசின் எனப்படும் நச்சுத்தன்மை இராசாயணம் காணப்படுகின்றது. இது நஞ்சினை அணியும் புலிகளுக்கு பொருத்தப்பாடுடைய இயல்பாக்க் காட்டியும், சில சமயங்களில் கார்த்திகைக்கிழங்கு தற்கொலைகளுக்கு காரணமாக அமைவதால் கரும்புலிகளோடு ஒப்பிட்டும் பார்க்கமுடியும் சிறப்பு வாய்ந்த்து. ஆனால் பொப்பி மலரில் போதை மட்டுமே உண்டு. இது கார்த்திகை மலரின் சிறப்பு.




     ஆகவே மீண்டும் ஒரு புறநானூற்றுத் தமிழனாக தன்னுடைய விடுதலைக்காக போராடி வீழ்ந்த வீர்ர்களை கல்லறைகளில் இட்டு அவர்களின் ஞாபகார்த்தமாக இக்காந்தள் மலரினை வைத்து ஒரு சில தினங்களையே மாவீர்ர் வாரமாக கொண்டாடுகின்ற மரபு ஈழத்தமிழரைத்தவிர ஏன் விடுதலைப் புலிகளைத் தவிர வேறு எந்த விடுதலை அமைப்புக்களுக்கோ, அரசுகளுக்கோ  இல்லாத தனிச்சிறப்பாகும். உலகிலே எங்கும் இடம்பெறாத வகையில் இந்த வீரக்குழந்தைகளுக்கு வீரத்தாழாட்டு ஈழத்தமிழ் மண்நணிலே சிறப்பாக இடம்பெற்று வந்தது. இன்று அந்த நிகழ்வும் புலம்பெயர வேண்டிய ஒரு காலத்தின் கட்டாயத்தில் கட்டுண்டு கிடக்கின்றது. 


       அந்தவகையில் முதன்முதலில் தமிழீழ விடுதலைப் போரில் வித்தான லெப்.சங்கரின் இறந்த நாளான கார்த்திகை 27 ஐ இறுதித் தினமாக்க் கொண்டு ஒரு வாரம் (21-27) மாவீர்ர் வாரமாக 1989ஆம் ஆண்டு முதல் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது. 1989 ஆம் ஆண்டு 1617 மாவீர்ர்கள் மணலாறு மாவட்டத்தில் இந்திய இராணுவத்தின் கெடுபிடிக்குள்ளும் நள்ளிரவு 12.01 இற்கு தீபங்கள் ஏற்றி மலர் தூவி நினைவு கூரப்பட்டனர். அந்த நேரத்திலே மாவீர்ர்களைப் புதைக்கும் வழக்கம் இருக்கவில்லை.


           வீரமரணமடைந்த போராளிகளின் உடல்களை அவரவர் குடும்பங்கள் கைக்கொள்ளும் மத சம்பிரதாயங்களின் அடிப்படையில் புதைக்கப்பட்டோ அல்லது எரிக்கப்பட்டோ அவர்களது இறுதிக் கிரியைகள் நடந்தன. மாறாக காடுகளுக்குள்  இறக்கும் மாவீர்ர்கள் மாத்திரம் புதைக்கப்பட்டனர். இதற்கு மணலாற்றில் உள்ள கமல் முகாம் ஒரு சாட்சியாக அமைகின்றது.   


       ஆனால் 1991 இலிருந்து வீரமரணமடைகின்ற மாவீர்ர்களின் உடல்கள் அனைத்தும் இனிமேல் எரிக்கப்படாது. புதைகுழிகளில் புதைக்கப்படும் எனவும் அவ்வாறு புதைக்கப்பட்ட மாவீர்ர்களின் இடத்தில் கல்லறைகள் எழுப்ப்ப்பட்டு அதில் அவர்கள் பெயர்கள் பொறிக்கப்பட்டு இவை எமது தேசிய நினைவுச் சின்னங்களாக பாதுகாக்கப்படும் எனவும் இவை காலங்காலமாக எமது போராட்ட வரலாற்றைச் சொல்லிக் கொண்டேயிருக்கும்.


       இந்த மாவீர்ர்கள் சாத்திர சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் கடந்து இந்த நாட்டின் பொதுச்சொத்தாக பொக்கிசங்களாக இருக்கின்றார்கள். இந்தப் பொக்கிசங்கள் வெறும் நினைவுகளாகவும், எண்ணிக்கைகளாகவும் மட்டும் இருக்க்க் கூடாது. அவை பொருள்வடிவில் என்றென்றும் எம்மண்ணில் இருந்துகொண்டேயிருக்கவேண்டும்.


      ஒரு மாவீரனை தலாட்டி சீராட்டி வளர்த்த தாய் சகோதர்ர்கள் தன் மகனின் அல்லது உறவினரின் மரணத்திற்கு வரமுடியாத நிலையில் அந்த வீரனை தகனம் செய்தால் நாளை அந்த தாய் சகோத்தர்களுக்கு எதைக்காட்டப் போகின்றோம். ஒரு மாவீரன் எம்மிடம் கேட்பது ஆறடி நிலம் மட்டுமே. எனவே தான் அந்த வீரனின் தாய் சகோதர்ர்கள் தன் பிள்ளைகளின் உடலைப் பார்க்காது விட்டாலும் அவன் புதைக்கப்பட்ட கல்லறையைப் பார்த்து ஆறுதலடையலாம் அல்லவா?.


 ஆகவே வீரமரணமடையும் மாவீர்ர்களது உடல்கள் இனிமேல் தகனம் செய்யப்படமாட்டாது புதைக்கப்படவேண்டும் என முடிவெடுத்துள்ளோம். இம்முடிவானது போராளிகளின் மிகப்பெரும்பாலானோரின் விருப்பத்திற்கிணங்கவே எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கின்றோம். என விடுதலைப்புலிகள் அறிவித்தார்கள்.






    அந்தவகையில் 1991 ஆண்டு தொடக்கம் வீரமரணமடைகின்ற மாவீர்ர்களது உடல்கள் அதற்கென ஒதுக்கப்பட்நட துயிலுமில்லங்களில் புதைக்கப்பட்டனர். அந்த 1991 ஆண்டில் 3750ற்கும் மேற்பட்ட மாவீர்ர்களுக்கு தமிழினம் நினைவுகூரியது. அதே வருடம் (1991) இடம் பெற்ற மாவீர்ர் நாளில் புதுவை இரத்தின துரையின் கவிதை வரிகளை இசைவாணர் கண்ணன் கானமாக மீட்ட வர்ண இராமேஸ்வரனின் குரலில் கோப்பாய் மாவீர்ர் துயிலுமில்லத்தில் மாவீர்ர் துயிலுமில்லப் பாடல் முதன் முதலில் ஒலிக்கப்பட்டு மாவீர்ர்கள் கௌரவிக்கப்பட்டனர்.


   பின் 1998 ஆம் ஆண்டிலிருந்து 25 ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரை மாவீர்ர் தினம் அனுட்டிக்கப்படுவதுதோடு முதல் மாவீர்ர் லெப்.சங்கர் வீரச்சாவடைந்த நேரமான மாலை 06.05 இற்கு சூரியன் மறையும் நேரம் இந்தச் சூரியர்களுக்கு தீபங்கள் ஏற்றி வணங்குவது குறிப்பிடத்தக்கது. 1998 ஆம் ஆண்டு 14.435 மாவீர்ர்களுக்கு நினைவு கூரப்பட்டது.


கடந்தவருடம் முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட நிகழ்வுக்குப் பின்னர். இவ்வீர்ர்களின் இருப்பிடங்கள் யாவும் களையப்பட்டன. இருந்தும் கடல் கடந்து தமிழர் வாழும் தேசங்கள் எங்கும் கார்த்திகை மலரின் அழகில் தாயகத்துக்காக தன்னுயிரிழந்த தயாளர்களின் முகங்களைப் பார்த்து இந்தவருடம் கிட்டத்தட்ட 35.000 மாவீர்ர்களுக்கும் தமிழீழ மண் கண்ணீரால் இவர்கள் பாதங்கள் நனைத்து வணங்கப் போகின்றது.


இந்தப் பின்னணியிலேயே உலக அரங்கில் ஈழத்தமிழினத்தின் குறியீடாக கார்த்திகைப்பூ மிளிர்ந்து நிற்கிறது. அது கமழும் தேசிய வாசத்தை நுகர்வதற்கு பேரினவாதம் தயாராக இல்லை. பௌத்த பண்பாட்டு விழுமிய மலரான நீலோற்பலம் தான் இலங்கைத்தீவின் ஒரே ஒரு பூ என அதன் நாசி வழிகள் எங்கும் நீலோற்பலத்தால் அடைத்து வைத்திருக்கிறது. ஆகவே உலகப் போரில் உயிர் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் பொப்பி தினமாகிய இந்நாளில் காந்தள் மலரின் நாயகர்களையும் நினைவேற்றிக் கொள்வதன்மூலம் பொப்பி மலரும் காந்தள் மலரும் கார்த்திகையில் சிறப்பம்சம் பெறுகின்றது.
Read more...

மக்களுக்காக மடிந்த வீரமறவர்கள் தினம் ஒரு நோக்கு, :- அ.மயூரன்

 



      மனித நாகரிகத்தின் ஆரம்பம் தொட்டு இன்று வரையான அதன் வரலாற்றுப் பரிணாம வளர்ச்சியில் நாகரிகங்களை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்றதோடு வரலாற்றுத் தடங்களை பதித்தவர்கள் போர் வீர்ர்களே. பலத்தின் மூலம்தான் மனித சமூகம் ஒவ்வொன்றும் தன்னை வரலாற்றில் முன்னிலைப்படுத்தியுள்ளது. இவ் நீண்ட வரலாற்றுக் கால ஓட்டத்தில் போர் வீர்ர்களைத்தான் அன்றிலிருந்து இன்றுவரை மனிதகுலம் நினைவு கூருகிறது, போற்றுகின்றது. இவ்வாறு மனித வரலாற்றை சமைத்து எமக்குத் தந்துவிட்டு மடிந்து போன மானவீர்ர்களை உலகெங்கும் பரந்து வாழும் மனித சமூகம் கொண்டாடிக்கொண்டிருந்தாலும், இன்றைய உலகில் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட வர்க்கங்களின் விடுதலைக்காக போராடிவீழ்ந்த வீர்ர்களை கௌரவிப்பதில் தமிழீழ மக்கள் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர். 


         அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11 ஆம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ்ந்த வீர்ர்களை நினைவு கூரியது தெரிந்த்தே. முதலாம் உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் ஜேர்மனி கைப்பற்றிய பிரதேசங்களை எல்லாம் நேச நாடுகள் மீளக் கைப்பற்றிய வேளையில் ஜேர்மனியின் படைகள் திக்குத் திசைமாறி நின்ற வேளையில் ஜேர்மனியின் மூன்று பிரதிநிதிகள் நேசநாடுகளின் தளபதியுடன் செய்துகொள்ளப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கை 1918 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 திகதி அதிகாலை ஐந்து மணிக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு பகல் 11 மணி 11 நிமிடத்திற்கு அமுலுக்கு வந்த்து.
 முதலாம் உலகப் போர் முடிவடைந்த நவம்பர் மாதம் 11 திகதியை உலகப் போரிலும் அதன் பின்னரும் ஏற்பட்ட சண்டைகளில் மாண்ட படைவீர்ர்களை பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள். இன்றுவரை நினைவு கூருகின்றனர்.

            தமிழீழ மக்கள் எவ்வாறு கார்த்திகை 27ஐ மாவீர்ர் தினமாக்க் கொண்டாடுகின்றனரோ அதேபோல் பிரித்தானிய மக்களுக்கும் கார்த்திகை 11 முக்கியத்துவம் பெறுகின்றது. பொப்பி எனப்படும் சிவப்பு நிற மலர் இந்நாளின் நினைவு மலராக்க் கொள்ளப்படுகின்றது. பெல்ஜியம் நாட்டில் உள்ள Flanders Fields  நகரத்திலும், பிரான்சிலும் இவ்வகைப் பொப்பிப் பூக்கள் அதிகம் காணப்படுகின்றன. அத்துடன் பிரித்தானியாவைச் சேர்ந்த போர்வீரன் லெப்டினட் கேணல் Jone McCrae   என்பவர் 1915 எழுதிய பெல்ஜியத்தில் Flanders Fields  போர்க்களத்தில் பொப்பிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன என்றும் சிலுவை அடையாளங்களுக்கிடையில் வரிசைவரிசையாகப் பூத்துக் குலுங்கும் பொப்பிப் பூக்கள் எங்களுடைய இருப்பை அடையாளங் காட்டுகின்றன. என்ற கவிதைவரிகளின் காரணமாகவே பொப்பிப் பூக்களை இந்நாடுகள் தங்களின் கல்லறை மலர்களாகத் தெரிந்தெடுத்திருந்தனர்.  


இன்று ஈழத்தமிழர்களின் வரலாற்று பண்பாட்டுவிழுமியத்துடன் கலந்துவிட்ட கார்த்திகைப்பூ என நாம் அழைக்கும் காந்தள் மலரினது இதழ்கள்.பண்டைய தமிழ் இலக்கியங்களில் பெண்களின் கைவிரல்களுக்கு ஒப்பிட்டுக் கூறப்படுவதால் இதனைக் காந்தள் மலர் என்பர். இக்கார்த்திகைப்பூ பண்டைத்தமிழ் வாழ்வுக்கு மிகவும் நெருக்கமான பூக்களில் ஒன்றாக இருந்துவந்துள்ளது. “காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்” என்று காந்தள் மலர் மாலை அணியும் வழக்கத்தை பதிற்றுப்பற்று அத்தாட்சிப்படுத்துகின்றது.

        “மரகதமணித்தாள் செறிந்த மணிக்காந்தள் மென் விரல்கள்” என்று சிலப்பதிகாரம் உவமை செய்கின்றது. “காந்தள் முழுமுதல் மெல்லிலை குழைய. முயங்கலும் இல்லுய்த்து நடுதலும்” என்று தலைவனுடைய மலையில் இருந்து மழைநீரால் அடித்து வரப்பட்ட காந்தட் கிழங்கை நட்டு வளர்த்துத் தன்னை ஆற்றுப்படுத்தும் நாயகி பற்றி குறுந்தொகை கூறுகிறது.



         “சேலை அடுக்கத்துச் சுரம்பு என விரிந்த காந்தளுள்ள்ளும்”  என தெய்வங்களுக்குக் காந்தள் பூ சூட்டப்பட்டதை அகநானூறு தெளிவு படுத்துகின்றது. “வெய்யறி சிறப்பன் வெளவாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறுபகை” என்று காந்தள் மலரணிந்து வெறியாடுவதைத் தொல்காப்பியம் சித்தரிக்கின்றது. அத்துடன் தமிழரின் போர்க்கடவுளான முருகனுக்குரிய பூவாக புறப்பொருள் வெண்பாமாலை சிறப்பித்துக் கூறுகின்றது. இப்படிக் கார்த்திகைப் பூவில் வாய் நனைக்காத புலவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு பழந்தமிழர் இலக்கியங்கள் எங்கும் கார்த்திகைப்பூ நிறைந்து கிடக்கின்றது. 


அத்துடன் ஒரு சிறப்பான விடயம் என்னவெனில் ஈழத்தின் விடிவுக்காக தம்முயிர்களைத் துறந்த வீர்ர்களின் நினைவுதினமான கார்த்திகை 27 ஆம் திகதி அன்றே அவுஸ்திரேலியாவில் வாழும் பழங்குடி மக்களான ஒஸ்திரலோயிட் மக்கள் தமது மடிந்தவர்களை நினைவு கூர்ந்து நினைவுதின விழாஒன்றை இத்தினத்திலேயே சிறப்பாகச் செய்கின்றனர் என்பது வியப்பான விடயம் மட்டுமல்ல. சிந்திக்கவும் தூண்டும் விடயமும் கூட. இது குறித்த மேலதிக விடயங்கள் ஆராயப்படவேண்டியவையே.



 அதேபோல் தாமாகச் சுதந்திரப் பிரகடனத்தைச் செய்து தமக்கென ஒரு நாட்டை உருவாக்கி அதற்கு சர்வதேச அங்கிகாரத்தையும் பெற்று இன்று சர்வ வல்லமையும் உடைய நாடாகத் தன்னை முன்னிலைப் படுத்தியுள்ள இஸ்ரேலும் தான் பிரகடணப்படுத்திய சுதந்திர தினத்தை (1948) ஆண்டு தோறும் தேசிய வீர்ர்கள் தினமாக்க் கொண்டாடி வருவதனைக் காணலாம். இன்று உலகம் முழுவதும் யூதர்கள் பலமாகவும் சக்தி வாய்ந்த இனமாகவும் இருப்பதற்கு அந்த இனத்தின் காவலர்களாக விளங்கியதோடு மட்டுமல்லாமல் பல உயிரிழப்புக்கள் தியாகங்கள் என்பனவற்றின் பின் இஸ்ரேல் என்ற நாட்டை சமைத்துக் கொடுத்த க்கானா என்கின்ற விடுதலை அமைப்பினர். முக்கியமாக இந்நாளில் நினைவு கூரப்படுகின்றனர்.     

      450 ஆண்டுகனளாக இந்தோனேசிய அரசாங்கத்தின் கொத்தடிமை தனத்தின் கீழ் இருந்த கிழக்குத் தீமோர் ஆனது கிழக்குத் தீமோரின் தந்தை எனப்படும் சனானா குஸ்மாவே அவர்களின் தலமையில் சிறிது சிறிதாக வளர்ந்து சுதந்திரப் போராட்டமாக மாறி 20.05.2002 சுதந்திரம் அடைந்த்து.
 அந்த நாள் இன்றும் சுதந்திநர தினமாக இல்லாது விடுதலைக்கு வித்தாகிப் போனவர்கள் நாளாக எழுச்சியுடனும் உணர்வு பூர்வமாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றமையைக் காணலாம். ஒரு தேசத்தின் பிறப்பு அந்நாட்டு மக்களின் கையில் தான் இருக்கின்றது என்பதனை கிழக்குத் தீமோர் மக்கள் தம் விடுதலைப் போராட்ட வெற்றியின் மூலம் நிரூபித்துள்ளனர். இவர்களின் வெற்றி விடுதலை வேண்டிப் போராடும் மக்கள் எப்படியும் வெற்றி பெற்றுச் சுதந்திரம் பெறுவர் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

  மேலும் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கர்களுக்கெதிராக சுதந்திரம் பெறுவதற்குப் போராடிய வியட்கொங்ந படையின் தலைவர் ஹோ-சி-மின் இறந்த நாளான 03.09.1969 ஆம் ஆண்டை வியட்நாமின் தேசிய வீர்ர்கள் தினமாக கொண்டாடி வருகின்றனர்.
    இவர்கள் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுடனான விடுதலைப் போரில் கொடுத்த விலைகளும் உயிரிழப்புக்களும் சொல்லொணாத்துயர்களும் எண்ணிலடங்காதவை. இந்தியா கூட தனது சுதந்திர நாளில் விடுதலைக்காக உயிரிழந்த வீர்ர்களை நினைவு கூருகின்றது. அதேபோல் ஜேர்மனியும் உலகப் போரில் இறந்த வீர்ர்களை தவறாது கௌரவித்து நினைவு கூருவது குறிப்பிடத்தக்கது.   


சுதந்திர தமிழீழ விடுதலையை அடிநாதமாக்க் கொண்டு அதற்கான விடுதலைப் போரை முன்னிறுத்தி போரிலே தங்களுயிர்களை தாரைவார்த்து தமிழர் மானம் காத்த மாவீர்ர் நாளை வர்ணிக்க மனித மொழிகளில் வார்த்தையில்லை. ஏரிநட்சத்திரங்களாக விடுதலையின் விடிவெள்ளிகளாக எரிந்து எமது விடுதலை வானை அலங்கரித்துக் கொண்டிருக்கும் சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் நாள். கார்த்திகை 27 கார்மேகம் கார்த்திகையில் கீழிறங்கி வந்து கல்லறைக் காவல் தெய்வங்களின் கால்கள் நனைக்கும் நாள். ஈடினையற்ற ஈகங்கள் புரிந்து அளப்பரிய அற்புதங்கள் செய்து மயிர்கூச்செறியும் சாதனைகள் செய்து எமது விடுதலைப் போராட்டத்தை பூமிப்பந்தெங்கும் விளங்கச்செய்த இந்த வீரமாவீர்ர்களின் வீரத்திருநாள் கார்த்திகை 27.  



      சங்ககாலத்திற்கு முன்பிருந்தே போரில் வீழ்ந்த வீர்ர்களை நினைவு கூருதல் இருந்து வருகின்றது. போரில் மாண்ட வீர்ர்களை புதைத்து அவர்களின் ஞாபகார்த்தமாக நடுகற்களை இட்டு வணங்குகின்ற நடுகல் வணக்கமுறை காணப்பட்டு வந்திருக்கிறது. எனவே போரில் இறந்த வீர்ர்களை வணங்குகின்ற முறை தமிழர் பண்பாடாகும். தமிழில் ஆரியம் கலப்பதற்கு முன் இறந்தவர்களை புதைக்கின்ற முறையே இருந்தது. தமிழில் ஆரியம் வந்து கலந்துவிட்டதன் பின் இறந்தவர்களை எரித்தார்கள். இது ஆரியமும் பிராமணியமும் எம்முள் புகுத்திய கலாச்சாரங்கள். போரில் இறந்தவர்களை வீர சுவர்க்கம் அடைந்தவர்கள் என மரியாதை செய்து நடுகல் நாட்டி வணங்கிய வரலாற்றை புறநானூற்றில் பரவலாக்க் காண்கின்றோம். அது பிற்காலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த்தனை இலக்கியங்கள் சான்றாக்கிறது. திருக்குறளிலும் போரில் இறந்த வீர்ர்களுக்கு கல்லறை அமைத்து வழிபடுதல் பற்றிக் கூறப்படுகிறது.


அந்தவகையில் மீண்டும் ஒரு புறநானூற்றுத் தமிழனாக தன்னுடைய விடுதலைக்காக போராடி வீழ்ந்த வீர்ர்களை கல்லறைகளில் இட்டு அவர்களின் ஞாபகார்த்தமாக ஒரு சில தினங்களையே மாவீர்ர் வாரமாக கொண்டாடுகின்ற மரபு விடுதலைப் புலிகளைத் தவிர வேறு எந்த விடுதலை அமைப்புக்களுக்கோ அரசுகளுக்கோ இல்லாத தனிச்சிறப்பாகும். உலகிலே எங்கும் இடம்பெறாத வகையில் இந்த வீரக்குழந்தைகளுக்கு வீரத்தாழாட்டு ஈழத்தமிழ் மண்நணிலே சிறப்பாக இடம்பெற்றது.

இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சீனப் போரியல் மேதையான சன்சூ அவர்களால் எழுதப்பட்டதாக்க் கூறப்படும் உலகப் போரியல் நுணுக்கங்களும் அதன் தந்திரோபாயங்களும் என்னும் நூலில் எவனொருவன் போரில் இறந்த வீர்ர்களுக்கு மரியாதை செய்து கௌகரவப்படுத்துகிறானோ அவனே சிறந்த வீரன் என்றார் சன்சூ.

   அத்துடன் போரில் மாண்ட வீர்ர்களின் கனவை நனவாக மாற்றுகின்ற படைத்தலைவன் தன்னிகரில்லாத் தலைவன் ஆகின்றான். என்று சன்சூ அன்று கூறியதை வரலாற்று நூல்களின் வாயிலாகவே அறிந்திருந்தோம். அன்று சன்சூ கற்பனை ரீதியாக கண்ட தன்னிகரில்லாத் தலைவன் இன்று தேசியத்தலைவர் பிரபாகரனாக ஈழத்தமிழர்களின் விடுதலைப் போரிற்கு கிடைத்திருப்பது நமது பாக்கியமே. அதேபோல் சாணக்கியரின் அர்த்த சாஸ்த்திரத்திலும் கூட போரில் இறந்தவனை எவ்வாறு கல்லறை அமைத்து நினைவு கூரப்பட்டது. என விரிவாகக் கூறுவதைக் காணலாம். சங்க்காலப் பாடல்கள் பலவும் இவ்வீர்ர்களை எவ்வாறு நினைவு கூரப்பட்டது என்பதற்கு சான்றாகிறது. 


   முதன்முதலில் தமிழீழ விடுதலைப் போரில் வித்தான லெப்.சங்கரின் இறந்த நாளான கார்த்திகை 27 ஐ இறுதித் தினமாக்க் கொண்டு ஒரு வாரம் (21-27) மாவீர்ர் வாரமாக 1989ஆம் ஆண்டு முதல் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது. 1989 ஆம் ஆண்டு 1307 மாவீர்ர்கள் மணலாறு மாவட்டத்தில் இந்திய இராணுவத்தின் கெடுபிடிக்குள்ளும் நள்ளிரவு 12.01 இற்கு தீபங்கள் ஏற்றி மலர் தூவி நினைவு கூரப்பட்டனர். 


அந்த நேரத்திலே மாவீர்ர்களைப் புதைக்கும் வழக்கம் இருக்கவில்லை. வீரமரணமடைந்த போராளிகளின் உடல்களை அவரவர் குடும்பங்கள் கைக்கொள்ளும் மத சம்பிரதாயங்களின் அடிப்படையில் புதைக்கப்பட்டோ அல்லது எரிக்கப்பட்டோ அவர்களது இறுதிக் கிரியைகள் நடந்தன. மாறாக காடுகளுக்குள் இறக்கும் மாவீர்ர்கள் மாத்திரம் விதைக்கப்பட்டனர்.   

          ஆனால் 1991 இலிருந்து வீரமரணமடைகின்ற மாவீர்ர்களின் உடல்கள் அனைத்தும் இனிமேல் எரிக்கப்படாது. விதைகுழிகளில் புதைக்கப்படும் எனவும் அவ்வாறு விதைக்கப்பட்ட மாவீர்ர்களின் இடத்தில் கல்லறைகள் எழுப்ப்ப்பட்டு அதில் அவர்கள் பெயர்கள் பொறிக்கப்பட்டு இவை எமது தேசிய நினைவுச் சின்னங்களாக பாதுகாக்கப்படும் எனவும் இவை காலங்காலமாக எமது போராட்ட வரலாற்றைச் சொல்லிக் கொண்டேயிருக்கும். இந்த மாவீர்ர்கள் சாத்திர சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் கடந்து இந்த நாட்டின் பொதுச்சொத்தாக பொக்கிசங்களாக இருக்கின்றார்கள். இந்தப் பொக்கிசங்கள் வெறும் நினைவுகளாகவும், எண்ணிக்கைகளாகவும் மட்டும் இருக்க்க் கூடாது. அவை பொருள்வடிவில் என்றென்றும் எம்மண்ணில் இருந்துகொண்டேயிருக்கவேண்டும். அத்துடன் 1990 ஆம் ஆண்டு தேசியத்தலைவர் அவர்கள் மாவீர்ர் வாரத்தை மக்களுக்குள் நடைமுறைப்படுத்தி மாண்ட வீர்ர்களைக் கௌரவிக்கும் முகமாக புலிகளின் கொடியாக இருந்த புலிக்கொடியைதேசியக் கொடியாக அறிவித்து அதில் இருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற எழுத்துக்களையும் நீக்கினார்.



            அந்தவகையில் 1991 ஆண்டு தொடக்கம் வீரமரணமடைகின்ற மாவீர்ர்களது உடல்கள் அதற்கென ஒதுக்கப்பட்நட துயிலுமில்லங்களில் விதைக்கப்பட்டனர். அந்த 1991 ஆண்டில் 3750ற்கும் மேற்பட்ட மாவீர்ர்களுக்கு தமிழினம் நினைவுகூரியது. அதே வருடம் (1991) இடம் பெற்ற மாவீர்ர் நாளில் புதுவை இரத்தின துரையின் கவிதை வரிகளை இசைவாணர் கண்ணன் கானமாக மீட்ட வர்ண இராமேஸ்வரனின் குரலில் கோப்பாய் மாவீர்ர் துயிலுமில்லத்தில் மாவீர்ர் துயிலுமில்லப் பாடல் முதன் முதலில் ஒலிக்கப்பட்டு மாவீர்ர்கள் கௌரவிக்கப்பட்டனர். 



      பின் 1998 ஆம் ஆண்டிலிருந்து 25 ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரை மாவீர்ர் தினம் அனுட்டிக்கப்படுவதுதோடு முதல் மாவீர்ர் லெப்.சங்கர் வீரச்சாவடைந்த நேரமான மாலை 06.05 இற்கு சூரியன் மறையும் நேரம் இந்தச் சூரியர்களுக்கு தீபங்கள் ஏற்றி வணங்குவது குறிப்பிடத்தக்கது. 1998 ஆம் ஆண்டு 14.435 மாவீர்ர்களுக்கு நினைவு கூரப்பட்டது. 2007 ஆம் ஆண்டு 19.887 மாவீர்ர்களுக்கும், கடந்த 2008 ஆம் ஆண்டு 24.600 ற்கும் மேற்பட்ட மாவீர்ர்களுக்கும், முள்ளிவாய்க்கால் போருக்குப்பின் இந்தவருடம் கிட்டத்தட்ட 36.000 மாவீர்ர்களுக்கும் தமிழீழ மண் கண்ணீரால் இவர்கள் பாதங்கள் நனைத்து வழியனுப்ப உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழினம் உலகெங்கும் கார்த்திகை தீபத்தை இம்மான வீர்ர்களை மௌனமாக வணங்குகிறது.  

       தமது வாயிலிருந்து விடுதலைப் போர் பற்றிய எதுவித உண்மைகளும் தெரியவரக்கூடாது என்பதற்காக தனது நாக்கை வெட்டி மாவீரனான கப்டன்.-பாலன். சயனைட் உண்டு வீரகாவியமான மூத்த தளபதிகளான குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வீர்ர்கள். தம்முயிர்களைத் துச்சமென மதித்து உடலையே கந்தகமாக்கி வெடித்து உயிர் நீத்த கரும்புலிகள். எதிரியிடம் பிடிபடக்கூடாது என்பதற்காக தம்மைத்தாமே அழித்த கேணல் கிட்டு போன்ற மாவீர்ர்கள். தன்னுடலை மெழுகுதிரியாக்கி உயிர்நீத்த திலீபன், வியட்நாமின் வியட்கொங் படைகளை வழிநடத்தி அவர்களின் வெற்றிக்கு வித்திட்ட வியட்நாமிய ஜெனரல் வோ நியூ கியன் ஜியாப் போல் தமிழர் படைகளை 25 ஆண்டுகளுக்கு மேல் வழிநடத்தி ஒவ்வொரு தாக்குதல்களையும் தலைமை ஏற்று விடுதலைப் போரை ஒரு மரபுவழிப்படையணியாக மாற்றி தேசியத் தலைவருக்கு பக்கபலமாக இருந்த படைத்தளபதிகளான பிரிகேடியர்கள் பால்ராஜ், தீபன், ஜெயம், சொர்ணம், சூசை, சசிகுமார் மாஸ்ரர், மணிவண்ணன், பானு, தமிழ்ச்செல்வன், துர்க்கா, விதுஷா, என தமிழீழத்தாய் பிரசவித்த வீரத்தின் சிகரங்கள் அனைவரும் கார்த்திகைப்பூ போலவே வித்தியாசமான தன்மைகளைக் கொண்டவர்களே. 
.
















      பொதுவாக விடுதலைக்காகப் போராடிய, போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் மற்றும் அரசுகளே போரில் இறந்த வீர்ர்களை ஆண்டு தோறும் நினைவு கூருகின்றனர். மாறாக ஏகாதிபத்தியத்தின் மூலம் நாடுகளை ஆக்கிரமித்த அமெரிக்காஅரசு இறந்த வீர்ர்களை நினைவு கூருவதை பொதுவாக்க் காணமுடிவதில்லை.
ஆனால் வியட்நாம் போரில் கொல்லப்பட்நட 58132 அமெரிக்க வீர்ர்களுக்கு ஜோன் ஸ்ரக்ஸ் என்பவரின் தலைமையில் வியட்நாம் வீர்ர்கள் நினைவுநிதி என்ற பெயரில் நிதி திரட்டப்பட்டு வோஷிங்டனில் ஆபிரகாம் லிங்கன் நினைவுசின்னத்திற்கருகில் 75 மீ உயரமான இரண்டு சுவர்களுடன் கூடிய கல்லறை அமைக்கப்பட்டு அதில் வியட்நாமில் இறந்த 58132 அமெரிக்க வீர்ர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டன. இந்நினைவு சின்னம் 1982 நவம்பரிலேயே திறந்துவைக்கப்பட்டன.   

                
 ஆனால் இன்று இராணுவக் ஆக்கிரமிப்புக்குள் தமிழீழ தேசம் விழுங்கப்பட்டதனால் அங்கு உள்ள மாவீர்ர் துயிலுமில்லங்கள் யாவும் அழிக்கப்பட்டுள்ளன. உலகப் பொது வழக்கங்களுக்கும், இராணுவ விழுமியங்களுக்கும் மாறாக சிங்களப் பேரினவாத அரசின் இவ் கல்லறைகள் இடிப்பு மனிதநாகரிக விழுமியங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம். இவ் ஈனச்செயலுக்கு சிங்களதேசம் என்றோ ஒரு நாள் பதில்சொல்லியே ஆகவேண்டும்.  

மேலும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஒவ்வொரு மாவீரனுக்கும் தனித்தனிக் கல்லறை அமைத்து அவர்களுக்காக விசேடமாக தனித்தனித் தீபங்கள் ஏற்றப்படுவதோடு மாவீர்ர்கள் பெற்றோரும் கௌரவிக்கப்படுகின்றமை எந்த ஒரு நாட்டிலும் இல்லாத தனிச்சிறப்பாகும். ஆனால் இன்று வெறும் படங்களிலும் வீடியோ காணொளிப்பதிவுகளிலுமே மாவீர்ர் துயிலுமில்லங்களைக் காண முடியும். எனினும் ஆயிரம் ஆயிரம் மாவீர்ர்களின் கல்லறைகளில் இம்முறை தீபங்கள் ஏற்ற முடியாதுதான். ஆனாலும் உங்களுக்காக தமிழீழ மக்கள் யாவரினதும் இதயங்களிலும் தீபங்கள் எரியும். நாளை தேசம் மீளும் போது உங்கள் கல்லறைகளில் நிச்சயம் கார்த்திகை தீபங்கள் எரியும்.

Read more...